Advertisement


சூமாக்கருக்கு புதிய சிகிச்சை

செப்டம்பர் 10, 2019 22:32
 Comments  
 


Formula One great Schumacher in Paris for cell therapy
 

பாரிஸ்: ‘பார்முலா–1’ ஜாம்பவான் சூமாக்கருக்கு புதிதாக ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெர்மனி கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர் 50. ‘பார்முலா–1’ பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் ஆனவர். 2010ல் ஓய்வு பெற்ற இவர், 2013 புத்தாண்டு கொண்டாட, பிரான்ஸ் சென்றார். இங்கு ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்க, தலையில் பலத்த அடி பட்டது. ஆறு மாதம் கோமாவில் வைக்கப்பட்டு இருந்தார். 2014 முதல் தனிப்பட்ட முறையில் சிகிச்சையில் உள்ளார்.

இவரால் நடக்க முடியவில்லை, பேச முடியவில்லை என நண்பர்கள் தெரிவித்தனர். மற்றபடி சூமாக்கர் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. இதனிடையே சூமாக்கருக்கு பாரிசில் உள்ள ‘பொம்பிடோ’ மருத்துவமனையில் ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை முறை நேற்று நடந்ததாக தெரிகிறது.

‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் பிரான்ஸ் பேராசிரியர் பிலிப் மனாசே, சூமாக்கருக்கு இந்த சிகிச்சை அளித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருமுறை சூமாக்கர், பாரிஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஸ்டெம் செல் என்பது...

தொப்புள் கொடி ரத்தம், எலும்பு மஜ்ஜை, கரு முட்டை, கல்லீரல், கணையம் என நமது உடலின் பல இடங்களில் ‘ஸ்டெம் செல்’ உள்ளன. இதில் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் செல்களால் தான் அதிக நன்மை கிடைக்கும்.

சூமாக்கரின் இதய செயலிழப்பை தவிர்க்கும் வகையில், கருமுட்டையில் இருந்து லட்சக்கணக்கான ‘ஸ்டெம் செல்களை’ எடுத்து, இதயத்தின் ரத்த நாளங்களை உருவாக்கும் வகையில் சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இது வெற்றி அடையும் பட்சத்தில் சூமாக்கர் மீண்டு வர வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது.

சிகிச்சை முடிந்து இன்று சூமாக்கர் வீடு திரும்புவார் என பிரான்சின் ‘லி பாரிசியன்’ பத்திரிகை தெரிவித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?