Advertisement


கோஹ்லி–ரோகித் உரசல் உண்மையா *ரவி சாஸ்திரி விளக்கம்

செப்டம்பர் 10, 2019 22:30
 Comments  
 


Difference of opinion cannot be seen as conflict, ravi Shastri on alleged
 

புதுடில்லி: ‘‘கேப்டன் கோஹ்லி–ரோகித் இடையே மோதல் என்ற செய்தி முட்டாள்தனமானது. இருவருக்கும் இடையே உரசல் இருந்திருந்தால், உலக கோப்பை தொடரில் ரோகித் எப்படி ஐந்து சதங்கள் அடித்திருப்பார்,’’என பயிற்சியாளர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆவேசமாக தெரிவித்தார்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா. இருவர் இடையே மோதல் என அவ்வப்போது செய்திகள் வந்தன. உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் தனது கருத்தை கேட்கவில்லை என்பதால் கோஹ்லியுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

இந்திய அணியில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரது கருத்துக்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என விரும்பமாட்டேன். வித்தியாசம் இருக்க வேண்டும். அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அப்போது தான் புதிய திட்டம் கிடைக்கும். வெவ்வேறு கருத்துக்களை வரவேற்பது தான் நல்லது.

இது மோதலா

எல்லோருக்கும் தங்களது கருத்துக்களை சொல்ல வாய்ப்பு கொடுத்து, இதில் இருந்து சிறந்தது எது என நாம் முடிவு செய்ய வேண்டும். ஒருசில நேரங்களில் மிகவும் ‘ஜூனியர்’ வீரரிடம் இருந்து, நாம் எதிர்பார்க்காத திட்டம் வெளிப்படும். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வீரர்களுக்கு இடையே மோதல், பிரச்னை என்ற பேச்சிற்கே இடமில்லை.

தவறான செய்தி

இந்திய அணி வீரர்களுடன் கடந்த ஐந்து ஆண்டுகள் ‘டிரசிங் ரூமில்’ இருந்து வருகிறேன். வீரர்கள் எப்படி விளையாடுகின்றனர், தங்களது பாராட்டுகளை எப்படி பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை பார்த்துள்ளேன். அப்படியிருக்க, கோஹ்லி, ரோகித் இடையே மோதல் என்பது முற்றிலும் முட்டாள்தனமான செய்தி. ஒருவேளை இருவருக்கும் மோதல் என்றால் உலக கோப்பை தொடரில் ரோகித் எப்படி ஐந்து சதங்கள் அடித்திருப்பார், இருவரும் எப்படி போட்டிகளில் ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து விளையாடுவர்.

ஆதரவு தாருங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் ஏதாவது சர்ச்சையை கிளப்புவதற்குப் பதில், அணியின் பக்கம் இருந்து எல்லோரும் ஆதரவு தர வேண்டும்.

ஏனெனில் கடந்த 1980 களில் விண்டீஸ் அடுத்து ஆஸ்திரேலியா செய்ததைப் போல, இப்போதைய இந்திய அணி சென்ற இடம்மெல்லாம் ஆதிக்கம் செய்கிறது. ஒருநாள், ‘டுவென்டி–20’, டெஸ்ட், ஐ.சி.சி., தொடர்கள் என அனைத்திலும் சாதிக்கிறோம். இது நம்ப முடியாத விஷயம்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?