Advertisement


கோப்பை வென்றார் நடால்: யு.எஸ்., ஓபனில் கலக்கல்

செப்டம்பர் 09, 2019 15:26
 Comments  
 


US Open Tennis, Nadal, Spain, Champion
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் 7–5, 6–3, 5–7, 4–6, 6–4 என்ற கணக்கில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–2’ ஸ்பெயினின் ரபெல் நடால், 5வது இடத்தில் இருந்த ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர்.

முதலிரண்டு செட்களை நடால் 7–5, 6–3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட மெட்வெடேவ், அடுத்த இரண்டு செட்களை 7–5, 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் சுதாரித்துக் கொண்ட நடால் 6–4 என வென்றார்.

நான்கு மணி நேரம், 50 நிமிடம் நீடித்த போட்டியில் நடால் 7–5, 6–3, 5–7, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.

அசரன்கா ஜோடி ஏமாற்றம்: பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி ஜோடி 5–7, 5–7 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், பெலாரசின் அரினா சபலென்கா ஜோடியிடம் வீழ்ந்து, 2வது இடம் பிடித்தது.

நான்காவது பட்டம்

பைனலில் அசத்திய ஸ்பெயினின் ரபெல் நடால், யு.எஸ்., ஓபனில் 4வது முறையாக (2010, 2013, 2017, 2019) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்களுக்கான பட்டியலில் 7வது இடத்தை முன்னாள் அமெரிக்க வீரர்களான ஜான் மெக்என்ரோ (4), ராபர்ட் ரென் (4) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

* இத்தொடரில் நடால் இன்னும் ஒரு பட்டம் வெல்லும் பட்சத்தில், அதிக முறை கோப்பை வென்ற வீரர்களுக்கான வரிசையில் 4வது இடத்தை அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ், பீட் சாம்பிராஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளலாம். இவர்கள் மூவரும் தலா 5 முறை கோப்பை வென்றுள்ளனர்.

19வது கிராண்ட்ஸ்லாம்

யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற ஸ்பெயினின் நடால், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இவர், இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), பிரெஞ்ச் ஓபனில் 12 (2005–08, 2010–14, 2017–19), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 4 (2010, 2013, 2017, 2019) முறை கோப்பை வென்றுள்ளார்.

இதன்மூலம் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்களுக்கான பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 பட்டம்) உள்ளார்.

* நடால் இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் பட்சத்தில், இப்பட்டியலில் முதலிடத்தை பெடரருடன் பகிர்ந்து கொள்ளலாம். எனவே அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பெடரர், நடாலுக்கு முக்கிய தொடராக கருதப்படும்.

ஐந்தாவது முறை

யு.எஸ்., ஓபனில் அசத்திய 33 வயது வீரரான நடால், 30 வயதுக்கு பின், 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் (2017–19ல் பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2017, 2019ல் யு.எஸ்., ஓபன்) வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

இரண்டாவது இடம்

ஸ்பெயினின் நடால் 33, அதிக வயதில் யு.எஸ்., ஓபனில் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் (1970, 35 வயது) உள்ளார்.

‘நம்பர்–4’

யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 5,235 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். முதல் மூன்று இடங்களில் முறையே செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (9,865 புள்ளி), ஸ்பெயினின் ரபெல் நடால் (9,225), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (7,130) நீடிக்கின்றனர்.

ரூ. 28 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கு, சாம்பியன் கோப்பையுடன், ரூ. 28.58 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், ரூ. 13.61 கோடி பரிசு பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?