Advertisement


ஹாரி ‘ஹாட்ரிக்’: இங்கிலாந்து வெற்றி

செப்டம்பர் 08, 2019 21:26
 Comments  
 


Harry Kane nets hat trick as England romp past Bulgaria
 

லண்டன்: ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டியில் ஹாரி கேன் ‘ஹாட்ரிக்’ கோல் அடிக்க, இங்கிலாந்து 4–0 என பல்கேரியாவை வீழ்த்தியது.

அடுத்த ஆண்டு ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான, தகுதிச்சுற்றுப்போட்டிகள் தற்போது நடக்கிறது. நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 55 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இங்கிலாந்து, பல்கேரியா அணிகள் மோதின. துவக்கம் முதலே இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் ஆதிக்கம் செலுத்தினார். 24வது நிமிடத்தில் அணிக்கு கோல் கணக்கை துவக்கினார். 49வது நிமிடத்தில் ‘பெனால்டி கிக்’ வாய்ப்பில், மீண்டும் கோல் அடித்து அசத்தினார். ஸ்டிரிலிங் (55வது நிமிடம்) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 3–0 என வலுவான முன்னிலை பெற்றது. மீண்டும், ‘பெனால்டி கிக்’ வாய்ப்பில் கலக்கிய ஹாரி கேன் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். கடைசி வரை எதிரணியால் எவ்வித பதிலடியும் தரவில்லை. முடிவில், இங்கிலாந்து அணி 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

* செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி 4–2 என செர்பியாவை வீழ்த்தியது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?