Advertisement


யு.எஸ்., ஓபன்: பைனலில் நடால்

செப்டம்பர் 07, 2019 19:08
 Comments  
 


US Open Tennis, Nadal, Medvedev, Final
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி மோதினர்.

‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய நடால், அடுத்த இரண்டு செட்களை 6–4, 6–1 என தன்வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய நடால் 7–6, 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

மெட்வெடேவ் அபாரம்: மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர். இரண்டு மணி நேரம், 38 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய மெட்வெடேவ் 7–6, 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன், இந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அதிகபட்சமாக 4வது சுற்று வரை சென்றிருந்தார்.

பைனலில் (செப். 8) நடால், மெட்வெடேவ் மோதுகின்றனர்.

ஐந்தாவது முறை

ஸ்பெயினின் ரபெல் நடால், யு.எஸ்., ஓபனில் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய 4 பைனலில், 3ல் (2010, 2013, 2017) வெற்றி பெற்று கோப்பை வென்ற நடால், ஒரு முறை (2011) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்

பைனலில் நடால் வெற்றி பெறும் பட்சத்தில், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்களுக்கான பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை (20 பட்டம்) நெருங்கலாம். இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), பிரெஞ்ச் ஓபனில் 12 (2005–08, 2010–14, 2017–19), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 3 (2010, 2013, 2017) என, 18 முறை கோப்பை வென்றுள்ளார்.

இரண்டாவது முறை

ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் நடால், மெட்வெடேவ் 2வது முறையாக மோதவுள்ளனர். இதற்கு முன், இந்த ஆண்டு கனடாவின் மான்ட்ரியலில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் முதன்முறையாக மோதினர். இதில் நடால் 6–3, 6–0 என வெற்றி பெற்று கோப்பை வென்றார்.

27வது கிராண்ட்ஸ்லாம் பைனல்

ஸ்பெயினின் ரபெல் நடால், 27வது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய 26 பைனலில், 18ல் வெற்றி பெற்று கோப்பை வென்ற இவர், 8ல் (ஆஸ்திரேலிய ஓபனில் 4, விம்பிள்டனில் 3, யு.எஸ்., ஓபனில் 1) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?