Advertisement


குன்னேஸ்வரன் தோல்வி

செப்டம்பர் 06, 2019 22:46
 Comments  
 


Prajnesh Gunneswaran, Jinan Open Tennis, China
 

ஜினன்: சீனாவில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தார்.

சீனாவில் உள்ள ஜினன் நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜப்பானின் கோ சோயிடா மோதினர். முதல் செட்டை 6–7 என இழந்த குன்னேஸ்வரன், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர், 3–6 எனக் கோட்டைவிட்டார்.

முடிவில் குன்னேஸ்வரன் 6–7, 6–3, 3–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் திவிஜ் சரண், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?