Advertisement


பைனலில் செரினா – பியான்கா: யு.எஸ்., ஓபனில் மோதல்

செப்டம்பர் 06, 2019 22:30
 Comments  
 


US Open Tennis, Serena Williams, Bianca Andreescu, Final
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கனடாவின் பியான்கா முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய செரினா 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

பியான்கா அசத்தல்: மற்றொரு அரையிறுதியில், 19 வயதான கனடாவின் பியான்கா ஆன்டிரஸ்கு, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இரண்டு மணி நேரம், 13 நிமிடம் வரை சென்ற போட்டியில் அசத்திய பியான்கா 7–6, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறிய 2வது கனடா வீராங்கனையானார். இதற்கு முன், 2014ல் லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் பைனலுக்கு கனடாவின் பவுச்சர்டு முன்னேறினார்.

பைனலில் (செப். 7) செரினா, பியான்கா மோதுகின்றனர்.

2006க்கு பின்...

பைனலில் பியான்கா சாதிக்கும் பட்சத்தில் 2006க்கு பின் யு.எஸ்., ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ‘டீன் ஏஜ்’ வீராங்கனை என்ற பெருமை பெறலாம். இதற்கு முன் 2006ல், 19 வயதான ரஷ்யாவின் மரியா ஷரபோவா யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

தவிர இது, பியான்காவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

10வது பைனல்

அரையிறுதியில் அசத்திய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், யு.எஸ்., ஓபனில் 10வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய 9 பைனலில், 6ல் (1999, 2002, 2008, 2012–14) வெற்றி பெற்று கோப்பை வென்ற செரினா, 3ல் (2001, 2011, 2018) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

இரண்டாவது முறை

டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் அரங்கில் செரினா, பியான்கா 2வது முறையாக மோதவுள்ளனர். இதற்கு முன், இந்த ஆண்டு டொரான்டோவில் நடந்த கனடா ஓபன் பைனலில் முதன்முறையாக மோதினர். இதில் செரினா காயத்தால் விலகியதால், பியான்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

24 பட்டம்

அனுபவ வீராங்கனை செரினா, பைனலில் அசத்தும் பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட் (24 பட்டம்) உடன் பகிர்ந்து கொள்ளலாம். செரினா இதுவரை, ஆஸ்திரேலிய ஓபனில் 11, பிரெஞ்ச் ஓபனில் 5, விம்பிள்டனில் 3, யு.எஸ்., ஓபனில் 5 என, 23 முறை கோப்பை வென்றுள்ளார்.

ஏழாவது பட்டம்

பைனலில் செரினா வெற்றி பெறும் பட்சத்தில், யு.எஸ்., ஓபனில் தனது 7வது பட்டத்தை கைப்பற்றலாம். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை அமெரிக்காவின் ஹெலன் வில்ஸ் மூடியுடன் பகிர்ந்து கொள்ளலாம். முதலிடத்தில் நார்வேயின் மொல்லா மல்லோரி (8 பட்டம்) உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?