Advertisement


கடைசி நிமிடத்தில் இந்தியா அதிர்ச்சி * உலக கோப்பை கால்பந்தில் ஏமாற்றம்

செப்டம்பர் 05, 2019 21:36
 Comments  
 


World cup, asian, qualification, india, oman
 

 கவுகாத்தி: உலக கோப்பை கால்பந்து தொடரின் ஆசிய பிரிவு தகுதிச்சுற்றில் கடைசி நிமிடத்தில் ஏமாற்றிய இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் வீழ்ந்தது. 

உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் (2022) நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றில் 40 அணிகள் பங்கேற்கின்றன. இவைகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. 

இந்திய அணி, ‘இ’ பிரிவில் வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான், கத்தாருடன் இடம் பெற்றுள்ளது. 

அசாமின் கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள இந்திய அணி, 87 வது இடத்தில் உள்ள வலிமையான ஓமனை சந்தித்தது. 

போட்டியின் 15வது நிமிடத்தில் கேப்டன் சுனில் செத்ரியிடம் இருந்து பந்தை வாங்கிய உடாண்டா, அடித்த பந்து ஓமன் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்ப, இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 20வது நிமிடம் அனிருத் தபா அடித்த ‘கார்னர் கிக்’ பந்தை சந்தேஷ் ஜின்கன், தலையால் முட்டி கோலாக்க முயன்றது வீணானது.

 24வது நிமிடம் இந்தியாவுக்கு ‘பிரீ கிக்’ கிடைத்தது. பிரண்டன் பெர்னாண்டஸ் அடித்த பந்தை வாங்கிய சுனில் செத்ரி, அப்படியே இடது காலால் அடித்து, கோலாக மாற்றினார். இது இந்திய அணிக்காக சுனில் செத்ரி அடித்த 72வது கோலாக அமைந்தது.

போட்டியின் 43வது நிமிடம் ஓமன் வீரர் தலையால் முட்டிய பந்தை இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் அசத்தலாக தடுக்க, முதல் பாதியில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில்  82வது நிமிடம் ஓமன் வீரர் அல் ரபியா, ஒரு கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் மீண்டும் மிரட்டிய அல் ரபியா, மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி 1–2 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?