Advertisement


உலக கால்பந்தில் அசத்துமா இந்தியா *தகுதிசுற்றில் இன்று ஓமனுடன் மோதல்

செப்டம்பர் 04, 2019 22:19
 Comments  
 


India face strong Oman in opening Word Cup Qualifiers
 

 கவுகாத்தி: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று இந்திய அணி, வலிமையான ஓமனை எதிர்த்து களமிறங்குகிறது. 

உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022ல் கத்தாரில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் இன்று துவங்குகின்றன. மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் 8 அணிகள், இரண்டாவது இடம் பெறும் சிறந்த 4 அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, ‘இ’ பிரிவில் வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான், கத்தாருடன் இடம் பெற்றுள்ளது. 

இன்று அசாமின் கவுகாத்தியில் நடக்கவுள்ள முதல் போட்டியில் தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள இந்திய அணி, 87 வது இடத்தில் இருக்கும் ஓமனை சந்திக்கிறது. கடந்த 2018 தகுதிச்சுற்றில் இந்திய அணி 8 போட்டியில் 1ல் மட்டும் வென்று (7 தோல்வி) கடைசி இடம் பெற்றது.

இம்முறை இகர் ஸ்டிமாச் பயிற்சியில் சற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய கிங்ஸ் கோப்பை தொடரில் 3வது, ‘இன்டர்கான்டினென்டல்’ தொடரில் வெளியேறியது என இந்திய அணி செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 

மத்திய கள பகுதியில் இளம் வீரர் அமர்ஜித் சிங் காயத்தால் விலகியதும் அணிக்கு பின்னடைவு தான். இருப்பினும் கேப்டன் சுனில் செத்ரி, அனிருத் தபா கைகொடுப்பர் என நம்பலாம். கடைசியாக 1994ல் நடந்த சுதந்திர தின கோப்பை அரையிறுதியில், இந்தியா, ஓமனை 4–1 என வீழ்த்தியது. மற்றபடி கடந்த 2018 தகுதிச்சுற்றின் இரு போட்டியிலும் இந்தியா தோற்றது. இன்று சொந்தமண்ணில் இந்திய கால்பந்து எழுச்சி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

காத்திருக்கு சவால்

இந்தியா, ஓமன் அணிகள் கால்பந்து அரங்கில் 7 போட்டியில் மோதின. இதில் ஒன்றில் (1994) மட்டும் வென்ற இந்தியா, இரு போட்டிகளை ‘டிரா’ (2004, 2018) செய்தது. மற்ற 4 போட்டியிலும் ஓமன் வென்றது. 

* இந்த ஏழு போட்டியில் இந்தியா 6 கோல் மட்டும் தான் அடித்தது. ஓமன் அணி 16 கோல் அடித்து ஆதிக்கம் செலுத்துகிறது. 

 

லோகோ அறிமுகம்

கத்தாரில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. வரும் 2022ல் நடக்கவுள்ளதை குறிக்கும் வகையில் இரவு 08 மணி, 22 நிமிடத்துக்கு (20:22) லோகோ வெளியானது. 8 மைதானங்களில் போட்டிகள் நடப்பதால், லோகோ ‘8’ வடிவத்தில், உலக கோப்பை போல வடிவமைக்கப்பட்டது. 

முதன் முறையாக குளிர் காலத்தில் தொடர் நடக்கவுள்ளது. அப்போது வளைகுடா நாடுகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் அணியும் பாரம்பரிய கம்பளி சால்வை, அப்படியே லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. இதிலுள்ள வளைவுகள் பாலைவன குன்றுகளை குறிக்கின்றன. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?