Advertisement


40 அடி உயரத்தில் இருந்து சிறுமி மீது விழுந்த ரசிகர்

செப்டம்பர் 04, 2019 22:07
 Comments  
 


Football fan falls from 40 feett high stadium stand, survives
 

 சாவ் பாலோ: கால்பந்து மைதானத்தில் 40 அடி உயரத்தில் இருந்து தவறி சிறுமி மீது விழுந்தார் ரசிகர். அதிர்ஷ்டவசமாக இருவரும் தப்பினர்.

பிரேசிலின் சாவ்பாலோ நகரில் மொரும்பி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. 66,795 பேர் அமர்ந்து பார்க்கும் மைதானத்தில் முதல் மற்றும் இரண்டாவது தளம் நிரம்பி வழிந்தது. அப்போது இரண்டாவது தளத்தில் இருந்த லாகோ டி மெலோ ரியாஸ் என்ற 23 வயது ரசிகர், உற்சாக மிகுதியில் அங்கிருந்த தடுப்பு மீது ஏற முயன்றார். 

திடீரென நிலை தடுமாறிய லாகோ, 40 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்தார். கீழ் தளத்தில் இருந்த 13 வயது சிறுமி உட்பட இருவர் மீது பலமாக மோதி, விழுந்தார். இதில் லாகோ மற்றும் சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

இங்கு லாகோ தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் சிறுமி தப்பினார்.  

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?