Advertisement


பெடரர் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபனில் ஏமாற்றம்

செப்டம்பர் 04, 2019 20:31
 Comments  
 


US Open Tennis, Roger Federer, Serena Williams
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் பிரிவில் செரினா, 100வது வெற்றியை பதிவு செய்தார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் 4வது கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 78வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர்.

முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய பெடரர், 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட இவர், 3வது செட்டை 6–3 என வென்றார். நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட டிமிட்ரோவ், 6–4 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய பெடரர் 2–6 என இழந்தார். மூன்று மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் பெடரர் 6–3, 4–6, 6–3, 4–6, 2–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். இதில் வாவ்ரின்கா 6–7, 3–6, 6–3, 1–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

செரினா அசத்தல்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சீனாவின் கியாங் வாங் மோதினர். மொத்தம் 44 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்தலாக ஆடிய செரினா 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

100வது வெற்றி: இது, யு.எஸ்., ஓபனில் செரினாவின் 100வது வெற்றி. அரையிறுதியில் செரினா, உக்ரைனின் ஸ்விடோலினாவை சந்திக்கவுள்ளார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில், யு.எஸ்., ஓபனில் 10வது முறையாக பைனலுக்கு முன்னேறலாம். தவிர, 20 ஆண்டுகளுக்கு முன் (1999), யு.எஸ்., ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசித்த செரினா, இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார்.  இம்முறை பைனலில் சாதிக்கும் பட்சத்தில், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மார்கரட் கோர்ட்(24 பட்டம்) உடன் பகிர்ந்து கொள்ளலாம். தவிர, யு.எஸ்., ஓபன் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டம் வென்ற வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட்டை முந்தி முதலிடம் பிடிக்கலாம். தற்போது இருவரும் தலா 6 முறை கோப்பை வென்றுள்ளனர்.

மற்றொரு காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை தோற்கடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?