Advertisement


வருகிறது ஐதராபாத் அணி

ஆகஸ்ட் 27, 2019 21:36
 Comments  
 


Hyderabad FC replaces struggling FC Pune City as new ISL franchise, ISL
 

 புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் வரும் சீசனில் புதியதாக ஐதராபாத் கால்பந்து எப்.சி., அணி களமிறங்குகிறது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் சென்னை, கோல்கட்டா, மும்பை, டில்லி, பெங்களூரு, புனே, கேரளா, கோவா, வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர் என 10 அணிகள் மோதுகின்றன. இதன் ஆறாவது சீசன் வரும் அக். 20ம் தேதி கொச்சியில் துவங்குகிறது. முதல் போட்டியில் கேரளா அணி, கோல்கட்டாவை சந்திக்கவுள்ளது.

இதனிடையே கடந்த இரு ஆண்டுகளாக புனே அணி நிர்வாகம் நிதிச்சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இதனால் மும்பை சிட்டி அணியுடன் இணையும் என கூறப்பட்டது. தற்போது புனேக்குப் பதில் புதியதாக ஐதராபாத் அணி வரும் களமிறங்கிறது.

கடந்த 1950 களில் இந்தியாவில் அஞ்சத்தக்க அணியாக ஐதராபாத் சிட்டி போலீஸ் அணி திகழ்ந்தது. ரோவர்ஸ் கோப்பை 9 முறை வென்ற இந்த அணி, துரந்த் தொடரில் பல முறை சாம்பியன் ஆனது. தற்போது ஐ–லீக் தொடரில் பங்கேற்கும் அணி கூட ஐதராபாத்துக்கு கிடையாது. ஐ.எஸ்.எல்., தொடரில் களமிறங்குவது, ஐதராபாத் கால்பந்து வளர்ச்சிக்கு மீண்டும் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?