Advertisement


எழுச்சி பெறுமா இந்தியா: தேசிய விளையாட்டு தினத்தில் எதிர்பார்ப்பு

ஆகஸ்ட் 25, 2019 17:50
 Comments  
 


national sports day, india, sania, tennis
 

இந்தியாவின் ஹாக்கி ‘மந்திரவாதி’ தயான் சந்த். துவக்கத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட இவர், நண்பர்களுடன் எப்போதாவது ஹாக்கி விளையாடினார். ராணுவத்தில் சேர்ந்த பிறகு, தந்தை வழியில் ஹாக்கியில் களமிறங்கினார். 

மொத்தம் 185 போட்டிகளில் பங்கேற்று 570 கோல்கள் அடித்தார். 1936 ஒலிம்பிக் பைனலில் ஜெர்மனிக்கு எதிரான இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர், ‘மேஜர் பதவி, ஜெர்மனி குடியுரிமை தருகிறேன்’ என அழைத்த போதும் மறுத்தார். 

ஒலிம்பிக் ஹாக்கியில் 3 முறை தங்கம் வெல்ல உதவிய இவர், 1979ல் மறைந்தார். தயான்சந்த் பிறந்த ஆக. 29ம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த விளங்கிய நட்சத்திரங்களுக்கு ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருதுகள் இத்தினத்தில் வழங்கப்படுகிறது. 

இவரது மிரட்டலான ஆட்டம் காரணமாக ஹாக்கி உலகம் இந்தியாவின் கையில் இருந்தது. ஒலிம்பிக்கில் 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 மற்றும் 1980 என 8 தங்கம் வென்று மிரட்டியது. தவிர, ஒரு வெள்ளி (1960), 2 வெண்கலம் (1968, 1972) வசப்படுத்தியது. இதன் பின் அவ்ளோ தான். 

ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதே பெரும்பாடாக உள்ளது. 2008ல் பீஜிங் போட்டிக்கு தகுதிபெறாமல் அதிர்ச்சி தந்தது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் முன்னேறவில்லை. இதற்கான கடைசி கட்ட தகுதிச்சுற்றுக்கு (வரும் அக். 26–நவ. 3) பிறகு தான் ஹாக்கி அணி நிலைமை தெரியவரும்

வரும் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாட உள்ள நிலையில் இந்தியாவின் மற்ற விளையாட்டுகளின் நிலை குறித்து காணலாம்.

கிரிக்கெட்

கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்றது. இதன் பின் அபரிதமான வளர்ச்சி அடைந்தது கிரிக்கெட். 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் ஒருநாள் உலக கோப்பை தோனி வென்று வந்தார். தற்போது கோஹ்லியின் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் ‘நம்பர்–1’ ஆக திகழ்கிறது. பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா என வியக்கத்தக்க வீராங்கனைகள் வந்தனர். இன்று இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகவே மாறி விட்டது. 

 

தடகளம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் (1900) நார்மன் பிரிச்சர்ட் (200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டம்) 2 வெள்ளி வென்றார். தற்போது 73 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். இதுவரை ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட ஒருவர் கூட இன்னும் இந்தியாவில் வரவில்லை. பி.டி.உஷா மட்டும் ஆசிய விளையாட்டில் சாதித்தார். 

ஆசிய சாம்பியன்ஷிப்பில் அசத்திய லட்சுமண் கோவிந்தன், ஆசிய விளையாட்டில் மிரட்டிய ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ், பூவம்மா, டுட்டீ சந்த், தருண் அய்யாச்சாமி உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

சரியான ஷூ வசதி கூட இல்லாத காலத்தில் தயான் சந்த் வெளிப்படுத்திய திறமையை, தற்போது பல்வேறு வசதி, வாய்ப்புகள் இருந்தும் இந்திய நட்சத்திரங்கள் பிரகாசிக்க முடியவில்லை. 

பாட்மின்டன்

லண்டன் ஒலிம்பிக்கில் (2012) செய்னா நேவல் வெண்கலம் வசப்படுத்திய பிறகு, இந்தியாவில் பாட்மின்டன் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்தது. 2016ல் சிந்து தன் பங்கிற்கு வெள்ளி கைப்பற்றினார். தவிர, உலக சாம்பியன்ஷிப்பில் சிந்து, 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று அசத்தினார். தவிர ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் உள்ளிட்டவர்கள் வருகையால், தொடர்ந்து ஏறு முகமாக உள்ளது.

கால்பந்து

கடந்த 1950, 60 களில் இந்திய வீரர்கள் வெறுங்காலில் கால்பந்து விளையாடியதாக கூறுவர். இந்திய கால்பந்து ‘சிஸ்டம்’ சரியில்லாததால் வீழ்ச்சிப் பாதையில் சென்றது. 1970க்குப் பின் சிறந்த வீரர்கள் என்றால் விஜயன், பாய்ச்சங் பூட்டியா, சுனில் செத்ரி என ஒரு சில பெயர்கள் நினைவுக்கு வருகிறது. தற்போது நிறைய விஷயங்கள் மாறி விட்டன. 2014ல் ஐ.எஸ்.எல்., வருகை பெரும் வரவேற்பை பெற்றது. உலக தரவரிசையில் 103வது இடத்தில் உள்ளது இந்தியா எனினும், ஆசிய அளவில் கூட சிறந்த அணியாக வர முடியாதது சோகம் தான். 

டென்னிஸ்

பீட் சாம்ப்ராஸ், ஆன்ட்ரூ அகாசி (அமெரிக்கா), பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்), ஜோகோவிச் (செர்பியா) என பலர் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்த, இந்திய சார்பில் இதுவரை உலகத்தரமான ஒற்றையர் வீரர்கள் யாரும் இல்லாதது பெரும் ஏமாற்றம் தான். 

அட்லாண்டா ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ், ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் வென்று தந்தார். இந்த வெற்றி கூட முன்னேற்றத்துக்கு உதவவில்லை. சோம்தேன் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் என பலர் வந்தாலும், சர்வதேச அளவில் சாதிக்க முடியவில்லை. பெண்கள் பிரிவில் சானியா மிர்சாவைத் தவிர இதுவரை யாரும் பெரியளவில் வெற்றிகள் பெறாதது ஏமாற்றமே. 

தேசிய விளையாட்டு தினம் கொண்டாட உள்ள நேரத்தில் இந்திய விளையாட்டு தரத்தை உலகளவில் பிரகாசிக்க செய்ய உறுதி கொள்ள வேண்டும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?