Advertisement


மனதில் உறுதி வேண்டும்

ஆகஸ்ட் 25, 2019 17:46
 Comments  
 


Ajay Thakur, pro kabaddi, india
 

 ‘‘கபடியில் உடற்தகுதி இருந்தாலும், திடமான மனது தேவை. ‘ரெய்டர்’ அல்லது தற்காப்பு வீரர் என எந்த இடத்தில் இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப செயல்பட இது உதவும்,’’ என, இந்திய வீரர் அஜய் தாகூர் தெரிவித்தார்.

இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், 33. ஆசிய விளையாட்டில் (2014) தங்கம் வென்று தந்த இவர், உலக கோப்பையும் (2016)  பெற்றுத்தந்தார். தற்போது, புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்துகிறார். அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

இது குறித்து அஜய் தாகூர் கூறியது: இந்த ஆண்டு மார்ச் மாதம், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது வென்றேன். தற்போது, அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி இருப்பது, கூடுதல் மகிழ்ச்சி. தற்போது, உள்ளரங்கில் விளையாடினாலும், பள்ளியில் படிக்கும்போது சாதாரண கபடியில் பங்கேற்றேன். எங்கள் இமாச்சல் மாநிலத்தில், கபடியிலிருந்து மிகப்பெரிய அளவில் யாரும் வரவில்லை. இதையும் தாண்டி, நான் வளர்ந்து வர எண்ணினேன். கபடியில் உடற்தகுதி இருந்தாலும், திடமான மனது தேவை. ‘ரெய்டர்’ அல்லது தற்காப்பு வீரர் என எந்த இடத்தில் இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப செயல்பட இது உதவும்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, ஓட்டத்தில் அதிக கவனம் செலுத்துவேன். இன்னும் இரண்டு சீசனில் மட்டும்தான் புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்பேன். இதன்பின், பயிற்சி ‘அகாடமி’ துவங்கும் எண்ணத்தில் உள்ளேன். இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?