Advertisement


கோஹ்லி சதம் * கோப்பை வென்றது இந்தியா

ஆகஸ்ட் 14, 2019 18:42
 Comments  
 


india, west indies, third odi cricket, port of spain
 

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். 

விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. 

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சகால் சேர்க்கப்பட்டார். 

நிதான துவக்கம்

விண்டீஸ் அணிக்கு கெய்ல், எவின் லீவிஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷமி வீசிய 2வது ஓவரில் கெய்ல் சிக்சர் விளாசினார். 9 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும் 4 ஓவரில் 13 ரன் எடுத்தது விண்டீஸ். 

திடீர் விளாசல்

இதன் பின் இருவருக்கும் என்ன ஆனது எனத் தெரியவில்லை. மாறி மாறி சிக்சர், பவுண்டரி என விளாசத் துவங்கினர். புவனேஷ்வர் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார் லீவிஸ். மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டினார் கெய்ல். ஷமியின் 3வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த கெய்ல், அடுத்து மூன்று பவுண்டரி விளாச, 20 ரன்கள் கிடைத்தன. விண்டீஸ் அணி 6.1 வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. 

மின்னல் வேகம்

கலீல் அகமது வீசிய முதல் பந்தில் சிக்சர் அடித்த லீவிஸ், பின் 2 பவுண்டரியும் அடித்து நொறுக்கினார். கடைசி 5 ஓவரில் 74 ரன்கள் எடுக்கப்பட்டன. கலீல் அகமது பந்தை சிக்சருக்கு விரட்டிய கெய்ல், 30 வது பந்தில் அரைசதம் எட்டினார். 

இந்த ஜோடியின் மின்னல் வேக ரன் குவிப்பு காரணமாக விண்டீஸ் அணியின் ஸ்கோர் 9.1வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்த கோஹ்லிக்கு, சகால் கைகொடுத்தார். இவரது முதல் ஓவரில், சிக்சருக்கு ஆசைப்பட்ட லீவிஸ் (43), தவானிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். 

ஓவர்கள் குறைப்பு

அடுத்து கலீல் பந்தில் பவுண்டரி அடித்த கெய்ல் (72), அதே ஓவரில் கோஹ்லியிடம் ‘பிடி’ கொடுத்தார். பின் ஷாய் ஹோப், ஹெட்மயர் இணைந்தனர். விண்டீஸ் அணி 22 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்த போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

மூன்று மணி நேரம் தாமதமாக மீண்டும் துவங்கிய போட்டி, தலா 35 ஓவர்களாக மாற்றப்பட்டது. ஹெட்மயர் (25), ஹோப் (24) போல்டாகினர்.  பூரன் 30, ஹோல்டர் 14, பிராத்வைட் 16 ரன் எடுத்தனர். விண்டீஸ் அணி 35 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்தது.  இந்தியா சார்பில் கலீல் அகமது 3,  முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கோஹ்லி (114), ஸ்ரேயாஸ் ஐயர் (65) கைகொடுக்க, 32.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 என இந்தியா கைப்பற்றியது. 

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?