Advertisement


கால்பந்து: இந்தியாவுக்கு சிறப்பு கோப்பை

ஆகஸ்ட் 12, 2019 20:23
 Comments  
 


India Women Football, COTIF Cup Soccer, Spain, 3rd Place Special Trophy
 

வாலன்சியா: ஸ்பெயினில் நடந்த ‘கோடிப்’ கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடம் பிடித்த இந்திய பெண்கள் அணிக்கு சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது.

ஸ்பெயினின் வாலன்சியாவில், பெண்களுக்கான ‘கோடிப்’ கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் மவுரிடானியா (3–1), பொலிவியா (7–0) அணிகளை தோற்கடித்த இந்திய அணி, வில்லாரியல் (0–2), 19 வயதுக்குட்பட்ட ஸ்பெயின் (0–2) அணிகளிடம் வீழ்ந்தது. இதனையடுத்து இந்திய அணி 3வது இடம் பிடித்தது.

இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு, 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது. தவிர, ‘பேர் பிளே’ விருதும் இந்தியாவுக்கு கிடைத்தது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மேமால் ராக்கி கூறுகையில், ‘‘இம்முறை இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்ததை கவனித்த தொடரை நடத்தும் நிர்வாகிகள் சிறப்பு கோப்பை வழங்கினர். இரண்டு போட்டியில் தோல்வி கண்ட போதிலும், மோசமான தோல்வியாக இல்லாதது ஆறுதலான விஷயம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?