Advertisement


பைனலுக்கு முன்னேறியது சேப்பாக்கம்

ஆகஸ்ட் 11, 2019 23:02
 Comments  
 


Tamil Nadu Premier League, Chepauk Super Gillies,  Dindigul Dragons
 

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு சேப்பாக்கம் அணி முன்னேறியது. தகுதிச் சுற்று–1ல், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த தகுதிச் சுற்று–1ல் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

ஸ்ரீதர் ராஜு அரைசதம்: சேப்பாக்கம் அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு, ஹரி கோபிநாத் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முகமது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஸ்ரீதர் ராஜு, ராமலிங்கம் ரோகித் வீசிய 3வது ஓவரில், 3 பவுண்டரி விளாசினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கோபிநாத், மோகன் அபினவ் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ஹரி நிஷாந்த் பந்தில் கோபிநாத் (16) அவுட்டானார். கேப்டன் கவுசிக் காந்தி (5), விஜய் சங்கர் (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்ரீதர் ராஜு, 36 பந்தில் அரைசதமடித்தார். இவர், 54 பந்தில் 81 ரன் (2 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார்.

அஷ்வின் ‘சுழலில்’ ஹரிஷ் குமார் (8) சிக்கினார். சசிதேவ் (26) ஓரளவு கைகொடுத்தார். சுஷில் (4) ‘ரன்–அவுட்’ ஆனார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்தது. முருகன் அஷ்வின் (14) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் ஹரி நிஷாந்த், பிரனேஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஜெகதீசன் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. அலெக்சாண்டர் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஜெகதீசன், பெரியசாமி வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது முருகன் அஷ்வின் ‘சுழலில்’ ஜெகதீசன் (37) போல்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹரி நிஷாந்த் (29) ஓரளவு கைகொடுத்தார்.

விவேக் (20), கேப்டன் அஷ்வின் (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. சுமந்த் ஜெயின் (13), சதுர்வேத் (14) நிலைக்கவில்லை. பெரியசாமி பந்தில் ரோகித் ராமலிங்கம் (1) போல்டானார். கடைசி ஓவரில் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. ஹரிஷ் குமார் வீசிய 20வது ஓவரில், 15 ரன் மட்டுமே கிடைத்தது.

திண்டுக்கல் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. முகமது (18), பிரனேஷ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் அணி சார்பில் பெரியசாமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

மூன்றாவது முறை

பைனலில் அசத்திய சேப்பாக்கம் அணி, டி.என்.பி.எல்., வரலாற்றில் 3வது முறையாக (2016, 2017, 2019) பைனலுக்கு முன்னேறியது. இதில் 2016ல் பைனலில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்த சேப்பாக்கம் அணி, 2017ல் கோப்பை வென்றது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?