Advertisement


தாய்லாந்து பெண்கள் உலக சாதனை

ஆகஸ்ட் 11, 2019 22:26
 Comments  
 


Thailand womens cricket team, twenty record
 

துபாய்: பெண்களுக்கான சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி வரலாற்றில் தாய்லாந்து அணி தொடர்ச்சியாக 17 வெற்றிகளை குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

நெதர்லாந்தில், பெண்களுக்கான 4 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதன் 5வது லீக் போட்டியில் தாய்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிய இலக்கை விரட்டிய தாய்லாந்து அணி 8 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 56 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

புதிய சாதனை

இது, தாய்லாந்துக்கு தொடர்ச்சியாக கிடைத்த 17வது வெற்றி. இதன்மூலம் பெண்களுக்கான சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன், ஆஸ்திரேலிய அணி (மார்ச் 2014– ஆக. 2015) தொடர்ந்து 16 வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை இங்கிலாந்து, ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் (தலா 14) பகிர்ந்து கொண்டுள்ளன. நியூசிலாந்து பெண்கள் அணி (12) 5வது இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?