Advertisement


பாக்., செல்லுமா இந்தியா: காஷ்மீர் விவகாரத்தால் சிக்கல்

ஆகஸ்ட் 08, 2019 22:33
 Comments  
 


AITA may request ITF to consider neutral venue for Davis Cup, Pak to honour decision
 

புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசிய, ஓசியானா பிரிவு ‘குரூப் 1’ போட்டிகள் வரும் செப்டம்பர் 14, 15ல் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், இஸ்லாமாபாத்தில் நடக்க உள்ளது.

இருதரப்பு உறவில் விரிசல் இருந்த போதும், 55 ஆண்டுக்குப்பின் போபண்ணா, திவிஜ் சரண் அடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதனால் இந்தியாவுடன் அனைத்து உறவையும் ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. தவிர வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடரை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட உள்ளது.

இந்திய டென்னிஸ் சங்க செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜீ கூறுகையில்,‘‘பாகிஸ்தான் செல்வது குறித்து தற்போது கூற முடியாது. இன்னும் இரண்டு நாட்களில் உறுதியாக தெரிந்து விடும்.  பாகிஸ்தான் துாதரகம் எங்களுக்கு விசா தர மறுத்து விட்டால் எப்படி செல்ல முடியும். ஒருவேளை, விசா தந்தாலும், போதிய பாதுகாப்பு தருவார்களா என மனதில் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. தேவைப்பட்டால் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த வலியுறுத்துவோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?