Advertisement


சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: ரஷ்யா, மலேசியா சாம்பியன்

ஆகஸ்ட் 06, 2019 23:19
 Comments  
 


special olympics soccer, malaysia, russia
 

சென்னை: மனவளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்தில் மலேசிய ஆண்கள், ரஷ்ய பெண்கள் அணிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

 

சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், மன வளர்ச்சி குன்றியோருக்கான, சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 15 நாடுகளை சேர்ந்த, 21 அணிகள் பங்கேற்ற இதில், மொத்தம் 168 வீரர்,- வீராங்கனையர் திறமை வெளிப்படுத்தினர்.

இதில், ‘லீக்’ போட்டிகளை தொடர்ந்து, நேற்று அரையிறுதி மற்றும் பைனல் நடந்தன. இந்த தொடரில், ஆண்கள் டிவிஷன் - 3 பிரிவில், மியான்மர் முதலிடம் பெற்றது. இந்தோனேசியா இரண்டாவது இடமும், இந்தியா மூன்றாம் இடமும் பிடித்தன.

டிவிஷன் - 2, பிரிவில், எகிப்து முதலிடம் பெற்றது. இதில், ஆஸ்திரியா இரண்டாவது இடமும், மாலத்தீவு மூன்றாம் இடத்தையும், பெற்றன. டிவிஷன் - 1 பிரிவில், மலேசியா முதலிடத்தை கைப்பற்றியது. இதில், கொரியா இரண்டாவது இடமும், இந்தியா மூன்றாம் இடமும் பிடித்தன.

பெண்கள் போட்டியை பொறுத்தவரை, டிவிசன் - 2 பிரிவில், இந்தோனேசியா முதலிடம் பிடித்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது, மலேசியா மூன்றாம் இடம் பெற்றன.

அதேபோல, டிவிசன் - 1 பிரிவில், ரஷ்யா முதலிடத்தை கைப்பற்றியது. இதில், பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடமும், பங்களாதேஷ் மூன்றாம் இடமும் பெற்றன. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ரஷ்யா மற்றும் மலேசியா அணிகள் கைப்பற்றின.

நிறைவு நாளான நேற்று மாலை 4:00 மாலை மணிக்கு, போட்டியில் வெற்றி அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவின் துவக்கத்தில், போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த, வீரர் - வீராங்கனையரும், தங்கள் நாட்டின் தேசியக்கொடியை சுமந்து கொண்டு, மைதானத்தை வலம் வந்தனர். 

இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி அணிகளுக்கு, கோப்பைகள், பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?