Advertisement


சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: இந்திய பெண்கள் வெற்றி

ஆகஸ்ட் 04, 2019 23:02
 Comments  
 


special olympic soccer, tamil nadu, chennai
 

சென்னை: சிறப்பு ஒலிம்பிக், சர்வதேச கால்பந்து போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.

மன வளர்ச்சி குன்றியோருக்கான, சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் – 2019 போட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கிறது. 

நேற்று காலை நடந்த பெண்களுக்கான போட்டியில் இந்திய அணி, 4 – 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. 

இந்தியா சார்பில் அபாரமாக ஆடிய குமாரி ஷிவானி மூன்று கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஆண்கள் பிரிவில் இந்திய அணி, கொரியாவிடம், 0 – 7 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

பெண்கள் பிரிவில், ரஷ்ய அணி, 5 – 0 என்ற கோல்கணக்கில், மாலத்தீவு அணியை வீழ்த்தியது. கோர்ச்சோவ் கிறிஸ்டினா நான்கு கோல்கள் அடித்து அசத்தினார். இந்தோனேஷியா அணி, வங்கதேசத்தை 2 – 1 என்ற கோல்கணக்கில் வென்றது. பிலிப்பைன்ஸ் அணி, 4 – 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வென்றது.

ஆண்கள் பிரிவில் ஆஸ்திரியா அணி, 1 – 0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது. மலேசிய அணி, 2 -– 0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?