Advertisement


இனி எல்லாம் ‘போனஸ்’: சொல்கிறார் சானியா மிர்சா

ஆகஸ்ட் 01, 2019 20:57
 Comments  
 


I will not comeback to prove anything, results in second innings will be bonus, sania
 

புதுடில்லி: ‘‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் அனைத்து சாதனைகளையும் அடைந்து விட்டேன். மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி கிடைப்பது எல்லாமே ‘போனஸ்’ தான்,’’ என, இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா தெரிவித்தார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா, 32. இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் தலா 3 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். இரட்டையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனை. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது வரை ஓய்வில் உள்ள, இவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சானியா கூறியது: 

எனது டென்னிஸ் வாழ்க்கையில், நான் கண்ட கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன். மீண்டும் களமிறங்கிய பின் கிடைக்க இருக்கும் வெற்றிகள் அனைத்தும் எனக்கு ‘போனஸ்’ தான். சர்வதேச அரங்கிற்கு இந்த மாதம் திரும்ப எண்ணினேன். ஆனால், வரும் ஜனவரியில் தான் விளையாட முடியும் என நம்புகிறேன்.

டென்னிஸ் மீதான ஆர்வமே, மீண்டும் பங்கேற்பதற்கான காரணம். மற்றபடி, எனது திறமையை மீண்டும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாயான பிறகு, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஜொலிக்கிறார். இவரைப்போன்ற வீராங்கனைகள்தான், எனக்கு ஊக்கம் தருகின்றனர். இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?