Advertisement


இந்தியாவுக்கு எத்தனை பதக்கம்: ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு

ஜூலை 28, 2019 19:05
 Comments  
 


sindhu, badminton, tokyo olympic
 

வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 14 பதக்கம் கிடைக்கும் என கிரேஸ்நோட் என்ற அனாலிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் 2020ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில் ‘கிரேஸ்நோட்’ என்ற நிறுவனம் உலகம் முழுவதும் நடக்கும் விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து, யார் யாருக்கு எவ்வளவு பதக்கம் கிடைக்கும் என கணித்தது. இதன் படி அமெரிக்கா 126 (51 தங்கம், 34 வெள்ளி, 41 வெண்கலம்), சீனா 81 (38–24–19), ஜப்பான் 67 (29–26–12) பதக்கங்கள் வென்று, பட்டியலில் ‘டாப்–3’ இடத்தை பிடிக்கும் எனத் தெரிகிறது.

நம்ப முடியுமா

இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த முறை 120 பேர் பெரிய எதிர்பார்ப்புடன் சென்றனர். 10 முதல் 14 பதக்கம் நிச்சயம் என நம்பப்பட்ட நிலையில், 2 பதக்கம் மட்டும் (தலா ஒரு வெள்ளி, வெண்கலம்) ஏமாற்றியது.  இம்முறை இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என எப்போதும் இல்லாத அளவுக்கு 14 பதக்கங்களை வென்று, பட்டியலில் 21 வது இடம் பெறும் என ‘கிரேஸ்நோட்’ கணித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் துப்பாக்கிசுடுதலில் 7, ஆண்கள் வில்வித்தையில் 3, தடகளத்தில் கே.டி.இர்பான் என சிலர் தான் ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற்றுள்ளனர். 

பாட்மின்டன் ஆறுதல்

பாட்மின்டனை பொறுத்தவரையில் கடந்த சில ஒலிம்பிக்கில் செய்னா (வெண்கலம், 2012), சிந்து (வெள்ளி, 2016) என நல்ல முன்னேற்றம் உள்ளது. ஹாக்கியில் ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் இன்னும் தகுதி பெறவே இல்லை. குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்கள் சர்வதேச அரங்கில் சாதித்து வந்தாலும், வரும் உலக சாம்பியன்ஷிப்பில் கடும் சவால் காத்திருக்கிறது. இதில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

எண்ணிக்கை போதுமா

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முழங்கை ஆப்பரேஷனுக்குப் பின் இப்போது தான் மீண்டு வருகிறார். ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், விஸ்மயா ஓரளவுக்கு உலகத் தரத்துக்கு போட்டியிடுகின்றனர். தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) இன்னும் தேறவில்லை. ஒலிம்பிக் துவங்க சில மாதங்களுக்கு முன் தான் தகுதி பெற்றவர்கள் விவரம் தெரியும். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?