Advertisement


மணிகா பத்ரா இலக்கு

ஜூலை 28, 2019 19:02
 Comments  
 


manika batra, india, table tennis
 

புதுடில்லி: ‘‘டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு,’’ என, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 24. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், பெண்கள் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தலா ஒரு தங்கம் வென்ற இவர், பெண்கள் இரட்டையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில், கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றார்.

சமீபத்தில் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் காயம் காரணமாக ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் விளையாடவில்லை. ஆனால் இவர் இடம் பெற்றிருந்த இந்திய அணி, முதன்முறையாக தங்கம் வென்றது. தற்போது இவரது பார்வை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மீது திரும்பி உள்ளது.

இதுகுறித்து மணிகா கூறியது: அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவதே முதல் இலக்கு. இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

கலப்பு இரட்டையரில் அஜந்தா சரத் கமலுடன் இணைந்து விளையாட உள்ளேன். அடுத்து வரும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்களில் இவருடன் இணைந்து விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம், ஒலிம்பிக்கில் சாதிக்க உதவும் என நம்புகிறேன். கடந்த 2015ல் சூரத்தில் நடந்த காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவு பைனலில் சிங்கப்பூர் அணியிடம் வீழ்ந்தது ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இம்முறை தங்கம் வென்றது மகிழ்ச்சி. இருப்பினும் ஒற்றையர், இரட்டையரில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம். இவ்வாறு மணிகா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?