Advertisement


நடால்– பெடரர் மோதல்: விம்பிள்டனில் ‘விறுவிறு’

ஜூலை 11, 2019 23:07
 Comments  
 


nadal, federer, wimbledon tennis, semi final
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரர் மோதுகின்றனர். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–2’ வீரரான ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் சாம் குயரியை (77வது இடம்) எதிர் கொண்டார். முதல் செட்டை 7–5 என கைப்பற்றிய நடால், அடுத்த இரு செட்டையும் 6–2, 6–2 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், நடால் 7–5, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

நட்சத்திர மோதல்

இன்று நடக்கவுள்ள அரையிறுதியில் நடால்– சுவிட்சர்லாந்தின் பெடரர் மோதவுள்ளனர். இருவரும் 39 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் நடால் 24, பெடரர் 15 போட்டியில் வென்றுள்ளனர். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் நடால், பெடரரை வீழ்த்தி இருந்தார். விம்பிள்டன் தொடரை பொறுத்தவரை, இருவரும் மூன்று முறை பைனலில் மோதினர். இதில் பெடரர் இரண்டு (2006,07), நடால் (2008) ஒரு முறை கோப்பை வென்றனர். 

இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் படிஸ்டாவை சந்திக்கிறார்.

ஹாலெப்– செரினா பலப்பரீட்சை

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–7’ வீராங்கனை ருமேனியாவின் ஹாலெப், தரவரிசையில் 8வது இடத்திலுள்ள உக்ரைனின் ஷிவ்டோலினாவை சந்தித்தார். முதல் செட்டை 6–1 என எளிதாக ஹாலெப் கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6–3 என 30 நிமிடத்தில் வசப்படுத்தினார். மொத்தம் ஒரு மணி நேரம் 13 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஹாலெப் 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இத்தொடரில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

* மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா 6–1, 6–2 என செக் குடியரசின் ஸ்டிரிகோவாவை வீழ்த்தினார். 

பைனலில் ஹாலெப்– செரினா பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?