Advertisement


ஆஸி.,யை சமாளிக்குமா இங்கிலாந்து

ஜூலை 10, 2019 22:44
 Comments  
 


ICC World Cup 2019, Australia, England, Semi Final, Cricket
 

பர்மிங்காம்: உலக கோப்பை அரையிறுதியில் இன்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் இன்று நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

வார்னர் நம்பிக்கை: ஆஸ்திரேலிய அணி, லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டியில், 7 வெற்றி, 2 தோல்வி என, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலியா விளையாடிய 7 அரையிறுதியிலும் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் டேவிட் வார்னர் (638 ரன்), கேப்டன் ஆரோன் பின்ச் (507) நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக உஸ்மான் கவாஜா விலகியது பின்னடைவு. அலெக்ஸ் கேரி (329), ஸ்டீவ் ஸ்மித் (294) கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். மேக்ஸ்வெல் (155), நாதன் கூல்டர்–நைல் (98) எழுச்சி காண வேண்டும்.

வேகப்பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க் (26 விக்.,), பட் கம்மின்ஸ் (13) பலம் சேர்க்கின்றனர். ‘ஆல்–ரவுண்டர்’ மார்கஸ் ஸ்டாய்னிஸ் (7 விக்.,) காயத்தில் இருந்து மீண்டிருப்பது ஆறுதலான விஷயம்.

சொந்த மண் சாதகம்: இங்கிலாந்து அணி லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில், 6 வெற்றி, 3 தோல்வி என, 12 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இதுவரை 5 முறை உலக கோப்பை அரையிறுதியில் விளையாடிய இங்கிலாந்து, 3 முறை (1979, 1987, 1992) வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இரண்டு முறை (1975, 1983) தோல்வியடைந்தது. இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் உலக கோப்பை வெல்ல முயற்சிக்கலாம். கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில், 10ல் இங்கிலாந்து வெற்றி பெற்றிருப்பது சாதகமான விஷயம். இருப்பினும் இம்முறை லீக் போட்டியில் 64 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

துவக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ் (462 ரன்), ஜேசன் ராய் (341) மீண்டும் நல்ல துவக்கம் தரலாம். ஜோ ரூட் (500), கேப்டன் இயான் மார்கன் (317), பென் ஸ்டோக்ஸ் (381) கைகொடுத்தால் இமாலய ஸ்கோரை பதிவு செய்யலாம். வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (17 விக்.,), மார்க் உட் (16), கிறிஸ் வோக்ஸ் (10) நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு பென் ஸ்டோக்ஸ் (7), லியாம் பிளங்கட் (8) ஒத்துழைப்பு தந்தால் விக்கெட் வேட்டை நடத்தலாம்.

இதுவரை...

சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 148 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 82, இங்கிலாந்து 61 போட்டிகளில் வென்றன. இரண்டு போட்டி ‘டை’ ஆனது. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை.

* உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6, இங்கிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.

மழை வருமா

இரண்டாவது அரையிறுதி நடக்கவுள்ள பர்மிங்காமில் இன்று, வெப்பநிலை அதிகபட்சம் 22, குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

12 முறை

அரையிறுதி நடக்கவுள்ள எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்காம்) மைதானத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 6 (1972, 77, 80, 2004, 2013, 2017), ஆஸ்திரேலியா 3 (1981, 85, 93) போட்டிகளில் வெற்றி பெற்றன. மூன்று (2005, 2012, 2013) போட்டிகளுக்கு முடிவு இல்லை.

அரையிறுதிக்கு வந்த பாதை

ஆஸ்திரேலியா

லீக் சுற்று

ஆப்கானிஸ்தானை வென்றது (7 விக்.,)

விண்டீசை வீழ்த்தியது (15 ரன்)

இந்தியாவிடம் சரிந்தது (36 ரன்)

பாகிஸ்தானை தோற்கடித்தது (41 ரன்)

இலங்கையிடம் வெற்றி (87 ரன்)

வங்கதேசத்தை வதைத்தது (48 ரன்)

இங்கிலாந்தை வென்றது (64 ரன்)

நியூசிலாந்தை சாய்த்தது (86 ரன்)

தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி (10 ரன்)

 

இங்கிலாந்து

லீக் சுற்று

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது (104 ரன்)

பாகிஸ்தானிடம் தோல்வி (14 ரன்)

வங்கதேசத்தை தோற்கடித்தது (106 ரன்)

விண்டீசை வென்றது (8 விக்.,)

ஆப்கானிஸ்தானை சாய்த்தது (150 ரன்)

இலங்கையிடம் சரிந்தது (20 ரன்)

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (64 ரன்)

இந்தியாவை வென்றது (31 ரன்)

நியூசிலாந்தை வீழ்த்தியது (119 ரன்)

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?