Advertisement


தங்கம் வென்றார் டுட்டீ சந்த்

ஜூலை 10, 2019 21:52
 Comments  
 


World University Games, Napoli, Italy, Dutee Chand, 100 meter Running
 

நாபோலி: உலக பல்கலை., விளையாட்டுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் டுட்டீ சந்த் தங்கம் வென்றார்.

இத்தாலியின் நாபோலியில், உலக பல்கலை., விளையாட்டு நடந்தது. இதில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் டுட்டீ சந்த், பந்தய துாரத்தை 11.32 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார்.

உலக அளவிலான தடகள போட்டியின் 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியரான டுட்டீ சந்த், உலக அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற 2வது இந்திய ஓட்டப்பந்தய நட்சத்திரமானார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த உலக ஜூனியர் தடகள போட்டிக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்றிருந்தார்.

இப்போட்டியில் அடுத்த இரண்டு இடங்களை முறையே சுவிட்சர்லாந்தின் டெல் பான்டே (11.33 வினாடி), ஜெர்மனியின் லிசா (11.39 வினாடி) ஆகியோர் பிடித்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?