Advertisement


விம்பிள்டன்: அரையிறுதியில் ஜோகோவிச், பெடரர்

ஜூலை 10, 2019 21:50
 Comments  
 


Wimbledon Tennis, Djokovic, Federer, Semi Final
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ‘நடப்பு சாம்பியன்’ செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளிட்டோர் முன்னேறினார்.

இங்கிலாந்தின் லண்டனில், நடப்பு ஆண்டின் 3வது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 23வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் டேவிட் கோபின் மோதினர்.

முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 6–0 என மிகச் சுலபமாக வென்றார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 6–2 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 56 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 6–4, 6–0, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுட், அர்ஜென்டினாவின் குய்டோ பெல்லா மோதினர். மூன்று மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பாடிஸ்டா அகுட் 7–5, 6–4, 3–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெடரர் அசத்தல்: மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜப்பானின் கெய் நிஷிகோரி மோதினர். முதல் செட்டை 4–6 என இழந்த பெடரர், பின் எழுச்சி கண்டு அடுத்த 3 செட்களை 6–1, 6–4, 6–4 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். இரண்டு மணி நேரம், 36 நிமிடம் நீடித்த போட்டியில் பெடரர் 4–6, 6–1, 6–4, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?