Advertisement


அரையிறுதியில் செரினா, ஹாலப்

ஜூலை 09, 2019 20:53
 Comments  
 


wimbledon tennis, serena, simona halep
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுஅரையிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் ஹாலப் முன்னேறினர்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–10’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, 55வது இடத்திலுள்ள சக வீராங்கனை அலிசன் ரிஸ்கியை சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த போட்டியின் முடிவில், செரினா 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில், ருமேனியாவின் ஹாலப் 7–6, 6–1 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் சூய் ஜங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெடரர் முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நம்பர்–3’ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர், இத்தாலியின் பெர்ரிட்டினியை (20வது இடம்) சந்தித்தார். அபாரமாக விளையாடிய பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 28 ஆண்டுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரர் (37 வயது) என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 1991ல் யு.எஸ்.ஓபனில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் 39 வயதில் காலிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

* ஒட்டுமொத்தமாக, இத்தொடரில் பெடரர் 17வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் வென்றால், விம்பிள்டனில் 100வது வெற்றியை பதிவு செய்யலாம்.

நிஷிகோரி வெற்றி

மற்றொரு போட்டியில், ‘நம்பர்–1’ வீரரும், நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச் 6–3, 6–2, 6–3 என பிரான்சின் ஹம்பெர்த்தை தோற்கடித்தார்.

மற்றொரு நான்காவது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி 6–3, 3–6, 6–3, 6–4 என கஜகஸ்தானின் மிகாயலை வென்றார்.

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் சாம் குயரி, அர்ஜென்டினாவின் கைய்டோ பெல்லா வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?