Advertisement


கோபா கால்பந்து: பிரேசிலுக்கு கோப்பை

ஜூலை 08, 2019 20:53
 Comments  
 


Copa America Soccer, Brazil, Champion
 

ரியோ டி ஜெனிரோ: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 3–1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது.

பிரேசிலில், கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 46வது சீசன் நடந்தது. ரியோ டி ஜெனிரோவில் நடந்த பைனலில் பிரேசில், பெரு அணிகள் மோதின.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பிரேசில் அணியின் எவர்டன் முதல் கோலடித்தார். இதற்கு, 44வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பெரு அணி கேப்டன் பாவ்லோ குரேரோ, ஒரு கோலடித்து பதிலடி தந்தார். உடனடியாக எழுச்சி கண்ட பிரேசில் அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+3வது நிமிடம்) கேப்ரியல் ஜீசஸ், ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணிக்கு, 90வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் ரிச்சார்லிசன், தன்பங்கிற்கு ஒரு கோலடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய பெரு அணியினரால் கூடுதலா கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 9வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 1919, 1922, 1949, 1989, 1997, 1999, 2004, 2007ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. முதலிரண்டு இடங்களில் உருகுவே (15 முறை), அர்ஜென்டினா (14) உள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?