Advertisement


பெடரர், நடால் கலக்கல்

ஜூலை 07, 2019 23:29
 Comments  
 


wimbledon tennis, serena, murray
 

லண்டன்: லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–3’ வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 28வது இடத்திலுள்ள பிரான்சின் லுாகாசை எதிர் கொண்டார். முதல் செட்டை 7–5 என கைப்பற்றிய பெடரர், அடுத்த செட்டையும் 6–2 என வென்றார். 

அடுத்த செட்டில் போராடிய இவர் 7–6 என வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம் 6 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், பெடரர் 7–5, 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இதனையடுத்து, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 350 வெற்றிகளை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இப்பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் 272 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தை ஸ்பெயினின் நடால் (262) வகிக்கிறார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (‘நம்பர்–2’), தரவரிசையில் 72வது இடத்திலுள்ள பிரான்சின் டிசோங்காவை சந்தித்தார். அபாரமாக விளையாடிய நடால் 6–2, 6–3, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

செரினா ஜோடி வெற்றி

கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னாள் சாம்பியன்களான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் செரினா ஜோடி களமிறங்கியது. முதல் சுற்றில் அசத்திய இவர்கள் 6–4, 6–1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியாஸ், சிலியின் அலெக்சா ஜோடியை தோற்கடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?