Advertisement


அர்ஜென்டினா 3வது இடம்

ஜூலை 07, 2019 23:26
 Comments  
 


copa america soccer, argentina team
 

சாவ் பாலோ: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி மூன்றாவது இடம் பிடித்தது. சிலி அணியை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

பிரேசிலில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடக்கிறது. சாவ் பாலோவில் நடந்த மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் மோதின. துவக்கத்திலேயே அர்ஜென்டினா அணி ஆதிக்கத்தை துவக்கியது. போட்டியின் 12வது நிமிடத்தில் அகுரோ முதல் கோல் அடித்தார். அடுத்த 10வது நிமிடத்தில், பாலோ (22) கைகொடுக்க, அர்ஜென்டினாவின் கோல் எண்ணிக்கை இரண்டாக மாறியது. முதல் பாதியில் அர்ஜென்டினா 2–0 என முன்னிலை பெற்றது. 

இதனால், கோல் அடிக்க வேண்டிய நெருக்கடி சிலி அணிக்கு ஏற்பட்டது. இதற்கேற்ப, 59வது நிமிடத்தில் சிலிக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. நட்சத்திர வீரர் விடால், பந்தை வலைக்குள் அனுப்பினார். இரு அணி வீரர்களாலும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. முடிவில், அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 1989க்குப்பின் இரண்டாவது முறையாக மூன்றாவது இடம் பிடித்தது.

மெஸ்சி ஆவேசம்

போட்டியின் 37வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பந்தை தட்டிச்செல்ல முயற்சித்த போது, சிலி கேப்டன் கேரியை சற்று தள்ளிவிட்டார். கோபம் அடைந்த கேரி, இரு முறை மெஸ்சியை நெஞ்சோடு நெஞ்சாகவும், தலையாலும் முட்டித்தள்ளினார். நடுவர் இரு வீரர்களும் தவறு செய்துள்ளனர் என முடிவு செய்து, ‘ரெட் கார்டு’ காண்பித்தார். உடனடியாக, இரு கேப்டன்களும் மைதானத்திலிருந்து வெளியேற, இரு அணியினரும் தலா 10 வீரர்களுடன் விளையாடினர்.

இது குறித்து மெஸ்சி கூறுகையில், ‘‘தொடர் முழுவதும் பிரேசில் அணிக்கு சாதகமாக நடக்கிறது. மூன்றாவது இடத்திற்கான போட்டி துவங்கும் முன், நடுவர் போட்டியை அமைதியாக நடத்த விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், சில நிமிடங்களில் எனக்கு ‘ரெட் கார்டு’ காட்டி வெளியேற்றினார். கோபா அமெரிக்கா தொடரின் ஊழலும், இப்படிப்பட்ட நடுவரின் செயல்பாடும் கால்பந்து விளையாட்டை பாதிக்கும்,’’ என்றார்.

இதை, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மறுத்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?