Advertisement


அமெரிக்கா ‘உலக சாம்பியன்’: கால்பந்தில் அசத்தல்

ஜூலை 07, 2019 23:24
 Comments  
 


usa, womens soccer, fifa world cup
 

லியான்: பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை தொடரில் அமெரிக்கா மீண்டும் கோப்பை வென்றது. பைனலில் நெதர்லாந்தை 2–0 என வீழ்த்தியது.

பிரான்சில் பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. லியான் நகரில் நடந்த பைனலில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 61வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் மேகன் பந்தை வலைக்குள் அனுப்பினார். 69வது நிமிடத்தில் ரோஸ் கச்சிதமாக கோல் அடிக்க, அமெரிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். கடைசி வரை நெதர்லாந்தின் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. முடிவில், அமெரிக்கா 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம், அமெரிக்கா நான்காவது முறையாக கோப்பை கைப்பற்றியது. ஏற்கனவே, 1991, 99, 2015ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?