Advertisement


ஜோகோவிச், பெடரர் ஆதிக்கம்

ஜூலை 06, 2019 22:50
 Comments  
 


Djokovic, Wimbledon tennis, third round
 

 லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் பெடரர், அமெரிக்காவின் செரினா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி, அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் மோதினர். அபாரமாக செயல்பட்ட நிஷிகோரி 6–4, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

நடால் வெற்றி 

மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர் 7–5, 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் லுாகாசை தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால் 6–2, 6–3, 6–2 என பிரான்சின் டிசோங்காவை வென்றார். 

மற்றொரு போட்டியில் ‘நம்பர்–1’ வீரர் மற்றும் நடப்பு சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், 48வது இடத்திலுள்ள போலந்தின் ஹுபர்ட்டை எதிர் கொண்டார். துடிப்பாக விளையாடிய ஜோகோவிச் 7–5, 6–7, 6–1, 6–4 என வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். 

அமெரிக்காவின் சாம் குயரி 7–6, 7–6, 6–3 என ஆஸ்திரேலியாவின் மில்மேனை போராடி வென்றார். 

காப் அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6–3, 6–4 என ஜெர்மனியின் ஜுலியாவை எளிதாக சாய்த்தார். 

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 6–1, 6–1 என பிரிட்டனின் ஹாரியத்தை தோற்கடித்தார். 

நடப்பு தொடரில் மிரட்டி வரும் 15 வயதான அமெரிக்காவின் கோரி காப், மூன்றாவது சுற்றில் 3–6, 7–6, 7–5 என சுலோவேனியாவின் ஹெர்காக்கை வீழ்த்தினார். 

செக் குடியரசின் கிவிட்டோவா 6–3, 6–2 என போலந்தின் மாக்டாவை தோற்கடித்தார். 

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ், ஸ்பெயினின் கார்லா சுவாரஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?