Advertisement


பெடரர், கிவிட்டோவா முன்னேற்றம்

ஜூலை 04, 2019 21:50
 Comments  
 


wimbledon tennis, federer, kvitova, third round
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செக் குடியரசின் கிவிட்டோவா உள்ளிட்டோர் முன்னேறினர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ‘நம்பர்–3’ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர், பிரிட்டனின் ஜெய் கிளார்க்கை (169வது இடம்) சந்தித்தார். சிறப்பாக விளையாடிய பெடரர் 6–1, 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி 6–4, 6–4, 6–0 என பிரிட்டனின் நுாரியை வீழ்த்தினார். 

இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் சாம் குயரி 6–3, 6–2, 6–3 என ரஷ்யாவின் ஆண்ட்ரி ருபெலவை வென்றார். மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், ஆஸ்திரேலியாவின் மில்மேன் வெற்றி பெற்றனர்.

ஆஷ்லே அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் மற்றும் ‘நம்பர்–1’ வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, பெல்ஜியத்தின் அலிசனை (58வது இடம்) எதிர் கொண்டார். அபாரமாக செயல்பட்ட பார்டி 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கிவிட்டோவா 7–5, 6–2 என பிரான்சின் கிறிஸ்டினா மெல்டினோவிச்சை வீழ்த்தினார்.

கோரி வெற்றி

முதல் சுற்றில் வீனசை வீழ்த்திய, அமெரிக்காவின் கோரி காப் 6–3, 6–3 என சுலோவாகியாவின் ரிபரிகோவாவை வென்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6–0, 6–2 என சீனாவின் யபான் வாங்கை தோற்கடித்தார்.

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி 4–6, 4–6, 6–4, 6–7 என நியூசிலாந்தின் மார்கஸ், நெதர்லாந்தின் வெஸ்லே ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.

தோற்றதால் அபராதம்

முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்டு டொமிக் 2–6, 1–6, 4–6 என பிரான்சின் டி சோங்காவிடம் வீழ்ந்தார். வெறும் 58 நிமிடத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மோசமாக டொமிக் தோற்றால், இவருக்கு விம்பிள்டன் டென்னிஸ் அமைப்பு அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில்,‘ ஆஸ்திரேலிய வீரர் டொமிக் ஒரு டென்னிஸ் வீரருக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ‘ரெப்ரியின்’ தெரிவித்த தகவல் படி இவருக்கு ரூ. 39 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் சுற்றுக்கான பரிசுத்தொகையிலிருந்து இது கழிக்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் சுற்றில் தோற்றால் கிடைக்கும் ரூ. 39 லட்சம் பரிசுத் தொகை அப்படியே பறிக்கப்பட்டது.

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?