Advertisement


பிலிஸ்கோவா, அசரன்கா அசத்தல்

ஜூலை 03, 2019 21:53
 Comments  
 


Wimbledon Tennis, Karolina Pliskova, Stan Wawrinka
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, பெலாரசின் விக்டோரியா அசரன்கா, பெல்ஜியத்தின் டேவிட் கோபின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர். சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

லண்டனில், நடப்பு ஆண்டின் 3வது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, போர்டோ ரிக்கோவின் மோனிகா புய்க் மோதினர். ஒரு மணி நேரம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பிலிஸ்கோவா 6–0, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா 6–2, 6–0 என, ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஹெதர் வாட்சன் 5–7, 1–6 என, எஸ்தோனியாவின் அனெட் கான்டவெய்ட்டிடம் தோல்வியடைந்தார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6–3, 4–6, 6–2 என்ற கணக்கில் சகவீராங்கனை புசார்னஸ்குவை வீழ்த்தினார்.

மற்ற போட்டிகளில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, கிரீசின் மரியா சக்காரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

வாவ்ரின்கா ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா மோதினர். மூன்று மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் வாவ்ரின்கா 5–7, 6–3, 6–4, 4–6, 6–8 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் 6–2, 6–4, 6–3 என, பிரான்சின் ஜெரிமி சார்டியை தோற்கடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?