Advertisement


விம்பிள்டன்: வீனஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி

ஜூலை 02, 2019 22:05
 Comments  
 


Cori Gauff, venus, Wimbledon tennis, first round
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் முகுருஜா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், நடப்பு ஆண்டின் 3வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ கெர்பர் (ஜெர்மனி) 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனையான டாட்ஜனாவை தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில், தகுதிச்சுற்றின் முலம் முன்னேறிய அமெரிக்காவின் கோரி காப் (15 வயது), ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை (39 வயது) எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஏமாற்றிய வீனஸ் 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஷரபோவா விலகல்

மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை ஷரபோவா, பிரான்சின் பவுலினாவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த செட்டை 6–7 என பறிகொடுத்தார். மூன்றாவது செட்டில் 0–5 என பின்தங்கி இருந்தபோது ஷரபோவா காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து, பவுலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு போட்டியில் முன்னாள் சாம்பியனான (2017) ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் பீட்ரிசிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜப்பானின் ஒசாகா 6–7, 2–6 என கஜகஸ்தானின் புடினட்செவாவிடம் வீழ்ந்தார். மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சுவிட்சர்லாந்தின் பெலின்டா, எஸ்டோனியாவின் கனேபி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பெடரர் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இதுவரை எட்டு முறை கோப்பை வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் பெடரர், தென் ஆப்ரிக்காவின் லிலாய்டை சந்தித்தார். இதில் பெடரர் 3–6, 6–1, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி 6–4, 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் தியாகோவை வீழ்த்தினார்.

தமிழகத்தின் குன்னேஸ்வரன் 6–7, 4–6, 2–6 என கனடாவின் மிலோஸ் ரவோனிச்சிடம் வீழ்ந்தார்.

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், பெல்ஜியத்தின் டேவிட் காபின் உள்ளிட்டோர் வென்றனர்.

ஆறு வயது முதல்...

அமெரிக்காவை சேர்ந்தவர் கோரி காப். இவரது குடும்பமே விளையாட்டுத்துறையை சேர்ந்தது. தாயார் கேன்டி தடகள வீராங்கனை. தந்தை கோரே கூடைப்பந்து வீரர். ஆறு வயது முதல் காப், டென்னிஸ் விளையாடி வருகிறார். 13வது வயதில் யு.எஸ்., ஓபன் ‘ஜூனியர்’ பிரிவில் பைனல் வரை முன்னேறினார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில், ‘ஜூனியர்’ பிரிவில் கோப்பை வென்றார். தற்போதைய, விம்பிள்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றிருந்தார். வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டனில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றபோது (2001) காப் பிறக்கவே இல்லை. இவரது சகோதரி செரினாவை பார்த்துதான், டென்னிசில் அடி எடுத்து வைத்ததாக முன்பு காப் கூறி இருந்தார்.

இந்த வெற்றி குறித்து காப் கூறுகையில்,‘‘ முதல் முறையாக போட்டியில் வெற்றி பெற்றபின்பும், அழுதேன். போட்டியை நேரடியாக பார்த்த எனது தந்தை, ஒவ்வொரு புள்ளி எடுத்தபோதும் உற்சாகத்தில் குதித்தார். இப்படி வெல்வேன் என நினைத்து கூட பார்க்கவில்லை,’’ என்றார்.

வீனஸ் கூறுகையில்,‘‘ கோரி காப்பிற்கு வானமே எல்லை. எல்லாவிதத்திலும் என்னை விட சிறப்பாக விளையாடினார்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?