Advertisement


கோஹ்லி முதலிடம்

ஜூன் 29, 2019 19:34
 Comments  
 


kohli, 10000 runs, india
 

 ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த வீரர்களில் அதிக ‘ஸ்டிரைக் ரேட்’ வைத்துள்ளவர்களில் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

உலக கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதி வேகமாக 20,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார் இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இதனிடையே, ஒருநாள் அரங்கில் 10,000 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் 14 வீரர்கள் எடுத்துள்ளனர்.

இதில் அதிகமான ‘ஸ்டிரைக் ரேட்’ கொண்டுள்ளது கோஹ்லி தான். அதாவது 100 பந்துகளை எதிர்கொண்டால் கோஹ்லி சராசரியாக 93.10 ரன்கள் எடுக்கிறார். இரண்டாவது இடத்தில் இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா உள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 91.20 ரன்னாக உள்ளது.

சமீபத்திய போட்டிகளில் பந்துகளை அதிகம் வீணடிக்கிறார் என விமர்சிக்கப்படும் இந்திய  விக்கெட் கீப்பர் தோனி, இந்த பட்டியலில் மூன்றாவதாக  உள்ளார். இவர் 100 பந்துகளுக்கு 89.49 ரன்கள் எடுக்கிறார். 

விண்டீஸ் வீரர் கெய்ல் (87.29) 4வதாக உள்ளார். இந்தியாவின் சச்சின், இலங்கை அணியின் தில்ஷன் 5வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்களது ‘ஸ்டிரைக் ரேட்’ 86.23 ஆக உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?