Advertisement


குவைத் கிரிக்கெட்டில் தமிழக வீரர்

ஜூன் 29, 2019 19:31
 Comments  
 


shankar, Kuwait cricket team
 

 நாமக்கல்: நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தமிழக வீரர் சங்கர், குவைத் தேசிய கிரிக்கெட்டில் அசத்துகிறார்.

நாமக்கல் மாவட்டம், பாச்சலை சேர்ந்த நெசவாளர் வரதப்பன், சாந்தி தம்பதியரின் மகன் சங்கர், 27. பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் பங்கேற்ற இவர், பொறியியல் படிக்கும்போது, மாவட்ட போட்டிகளில்  திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், குவைத் நாட்டின் என்.பி.டி.சி., நிறுவனத்தில், 2015ல் இருந்து, தரக்கட்டுப்பாட்டு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கும் கிரிக்கெட் ஆர்வத்தை குறைத்து கொள்ளாமல், பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆர்வத்தை பார்த்த என்.பி.டி.சி., நிறுவனம், தொடர்ந்து விளையாட ஊக்குவித்தது.

கடந்த, 2016ல் குவைத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சங்கர், 57 பந்துகளில், 169 ரன்களை குவித்தார். தொடர்ந்து, குவைத் லீக் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். 2018, 2019ல், குவைத் தேசிய கிரிக்கெட் இயக்குனரிடம், ‘பெஸ்ட் பர்பாமர்’ விருது பெற்றுள்ளார்.

குவைத் தேசிய கிரிக்கெட் அணியில், பாகிஸ்தான், இலங்கை வீரர்களின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில், முதன் முறையாக தமிழக வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். தற்போது, குவைத் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வருகிறார்.

இதுகுறித்து சங்கர் கூறியதாவது: ஜூலை, 3ல் கத்தாரில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன். அதையடுத்து ஜூலை, 22 முதல், 28 வரை, சிங்கப்பூரில், நடக்கும், ஐ.சி.சி., டி–20 உலகக்கோப்பை ஆசிய மண்டல தகுதி இறுதி போட்டியில் விளையாடுகிறேன். அதில், குவைத் அணி வெற்றி பெற்றால், 2020ல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஐ.சி.சி., டி–20 உலக கோப்பை போட்டியில், குவைத் அணியில், துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?