Advertisement


எல்லா பெருமையும் எனக்கே: ஷமி பெருமிதம்

ஜூன் 28, 2019 22:36
 Comments  
 


I credit myself for this turnaround after what all I had to suffer, Shami
 

மான்செஸ்டர்: ‘‘கடந்த 18 மாதங்கள் என்னை பாதிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்தன. இதிலிருந்து சுயமாக மீண்டு வந்ததால், எல்லா பெருமையும் எனக்கே சொந்தம்,‘‘என,  முகமது ஷமி தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 29. கடந்த 2015 உலக கோப்பை தொடரில் 17 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல உதவினார். பின், முழங்கால் காயத்தால் 22 மாதங்கள் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2017 ல் 3 போட்டிகள் விளையாடினார்.

மனைவியுடன் ஏற்பட்ட சர்ச்சை, ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, 2018 ஐ.பி.எல்., தொடரில் 4 போட்டியுடன் விலகியது என சோகம் துரத்தியது. ஒருவழியாக உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

இருப்பினும் பும்ரா, புவனேஷ்வர், பாண்ட்யா கூட்டணி தான் கோஹ்லியின் தேர்வாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக புவனேஷ்வருக்கு காயம் ஏற்ப, ஷமிக்கு வாய்ப்பு சென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ உட்பட 4 விக்கெட் சாய்த்து, வெற்றிக்கு உதவினார். விண்டீஸ் அணிக்கு எதிராகவும் மிரட்டிய இவர், தவிர்க்க முடியாத பவுலராகி விட்டார்.

இதுகுறித்து முகமது ஷமி கூறியது: கடந்த 18 மாதங்களாக என்னைச் சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்தன. அனைத்தும் என்னை பாதிக்கும் விதத்தில் இருந்தன. ‘யோ யோ’ தகுதியில் தேறாதது மட்டுமல்ல, பந்து எப்படி வீசுவது என்ற ‘ரிதம்’ கூட வரவில்லை. இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு மீண்டுள்ளேன். இதற்காக என்னை, நானே புகழ்ந்து  கொள்கிறேன்.

தேசத்திற்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் உள்ளது. இதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். உடல் எடை குறைத்து, சரியான ‘பார்மிற்கு’ வந்துள்ள நான், பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். சரியான உணவு முறையை கடைபிடித்து, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறேன். பந்தில் வேகம் அதிகரித்துள்ளது. எளிதாக சோர்வடையாமல் உள்ளேன். குடும்ப பிரச்னைகள், உடற்தகுதியின்மை என அனைத்தையும் எதிர்த்து போராடத் தேவையான பலத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?