Advertisement


12வது கோப்பை வென்றார் நடால்: பிரெஞ்ச் ஓபனில் தொடரும் ஆதிக்கம்

ஜூன் 09, 2019 23:08
 Comments  
 


History man Nadal sweeps to 12th French Open and 18th Grand Slam title
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 12வது முறையாக கோப்பை வென்றார். பைனலில் ஆஸ்திரியாவின் தியமை தோற்கடித்தார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–2’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தரவரிசையில் 4வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை சந்தித்தார். இதற்கு முன், இத்தொடரின் பைனலில் பங்கேற்ற அனைத்திலும் கோப்பை வென்ற நடால் வழக்கம் போல சீறினார். எதிர்பார்த்ததுபோல, முதல் செட்டை நடால் 6–3 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 5–7 என போராடி பறிகொடுத்தார். 

சரிவிலிருந்து மீண்டார்

ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, சரிவிலிருந்து விரைவாக மீண்டார். மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6–1 என எளிதாக வசப்படுத்தினார். நான்காவது செட்டில் வென்றால் கோப்பை என்ற நிலையில், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் 6–1 என கைப்பற்றினார். மூன்று மணி நேரம் ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், நடால் 6–3, 5–7, 6–1, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், களிமண் களத்தில் ‘கிங்’ என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்தார்.

முதலிடம்

இப்போட்டியில் வென்றதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் தொடரில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் நடால் முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை பைனலுக்கு முன்னேறிய 12 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

18

இதில் அசத்திய நடால் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் (ஆஸி.,–1, பிரெஞ்ச்–12, விம்பிள்டன்–2, யு.எஸ்., ஓபன்–3) 18வது கோப்பை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20) உள்ளார்.

முதல் நட்சத்திரம்

கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் ஒரே தொடரில் அதிக முறை கோப்பை (12, பிரெஞ்ச் ஓபன்) வென்ற நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார் நடால். இதற்கு முன், ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்ரெட், ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றதே அதிகமாக இருந்தது. 

பரிசு எவ்வளவு

கோப்பை வென்ற நடாலுக்கு ரூ. 18 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 

பதிலடி

கடந்த ஏப்ரலில் நடந்த பார்சிலோனா ஓபன் அரையிறுதியில் நடால், டொமினிக் தியமிடம் வீழ்ந்தார். நேற்று பைனலில் அசத்திய நடால் இந்த தோல்விக்கு தக்க பதிலடி தந்தார். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?