Advertisement


ஆஷ்லே பார்டி சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்

ஜூன் 08, 2019 21:37
 Comments  
 


French Open Tennis, Ashleigh Barty, Women Single Champion
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6–1, 6–3 என, செக்குடியரசின் வான்ட்ரோசோவாவை தோற்கடித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரோசோவா மோதினர். முதல் செட்டை 6–1 எனக் கைப்பற்றிய ஆஷ்லே, 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார்.

46 ஆண்டுகளுக்கு பின்:  ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே பார்டி 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். தவிர, 46 ஆண்டுகளுக்கு பின், பிரெஞ்ச் ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். கடைசியாக 1973ல் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரட் கோர்ட் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

‘நம்பர்–2’ இடம்

பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, ஜூன் 10ல் வெளியாக உள்ள பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறுகிறார்.

ரூ. 18 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டிக்கு, கோப்பையுடன் ரூ. 18 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?