Advertisement


பைனலில் நடால் – தியம் மோதல்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஜூன் 08, 2019 20:40
 Comments  
 


French Open Tennis, Dominic Thiem, Nadal,Final, Djokovic, Semi Final Lost
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பைனலில் ஸ்பெயினின் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதுகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். இதில் தியம் 6–2, 3–6, 3–1 என முன்னிலையில் இருந்த போது மழையால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதில் 3வது செட்டை தியம் 7–5 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச் 4வது செட்டை 7–5 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் தியம் 4–1 என, முன்னிலையில் இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

மழை நின்ற பின், மீண்டும் போட்டி நடந்தது. இதில் அபாரமாக ஆடிய தியம், 7–5 என வென்றார். நான்கு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் டொமினிக் தியம் 6–2, 3–6, 7–5, 5–7, 7–5 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக (2018, 2019) பைனலுக்குள் நுழைந்தார்.

மீண்டும் மோதல்: பைனலில் (ஜூன் 9) டொமினிக் தியம், ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடாலை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு நடந்த பைனலில் இவர்கள் மோதினர். இதில் நடால் வெற்றி பெற்று கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான நடாலின் ஆதிக்கம் தொடரும் பட்சத்தில், பிரெஞ்ச் ஓபனில் 12வது முறையாக கோப்பை வெல்லலாம். கடந்த ஆண்டு கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தால் தியம், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசிக்கலாம்.

ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் 12 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 8, தியம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றனர். கடைசியாக இந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் அரையிறுதியில் தியம், நடாலை வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?