Advertisement


பிரெஞ்ச் ஓபன்: பைனலில் நடால்

ஜூன் 07, 2019 21:05
 Comments  
 


French Open Tennis, Nadal, Federer, Semi Final
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் நடால் முன்னேறினார். அரையிறுதியில் 6–3, 6–4, 6–2 என, சுவிட்சர்லாந்தின் பெடரரை வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினர். உலகின் ‘நம்பர்–2’ வீரரான நடால், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய இவர், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தினார். மூன்றாவது செட்டில் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெடரர் 2–6 எனக் கோட்டைவிட்டார்.

12வது முறை: இரண்டு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய நடால் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, 12வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இவர், முன்னதாக விளையாடிய 11 பைனலிலும் (2005–08, 2010–14, 2017–18) வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, பெடரருக்கு எதிராக நடால் பெற்ற 24வது வெற்றி. இதுவரை இவர்கள் 40 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 24, பெடரர் 15 போட்டிகளில் வென்றனர். ஒரு போட்டியில் நடால் காயத்தால் விலக, பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மழை குறுக்கீடு: மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். முதல் செட்டை தியம் 6–2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச், 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். மூன்றாவது செட்டில் தியம், 3–1 என முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.

ஆஷ்லே அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் அமந்தா அனிசிமோவா மோதினர். ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே 6–7, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா, செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரோசோவா மோதினர். இதில் அபாரமாக ஆடிய வான்ட்ரோசோவா 7–5, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் (ஜூன் 8) ஆஷ்லே, வான்ட்ரோசோவா மோதுகின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?