Advertisement


பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்

ஜூன் 06, 2019 20:58
 Comments  
 


French Open Tennis, Novak Djokovic, Semi Final
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். முதல் செட்டை 7–5 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், அடுத்த இரண்டு செட்களை 6–2, 6–2 என எளிதாக வென்றார். இரண்டு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 7–5, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

தியம் வெற்றி: மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6–2, 6–4, 6–2 என்ற கணக்கில் ரஷ்யாவின் கரேன் கச்சானோவை தோற்கடித்தார்.

அரையிறுதியில் (ஜூன் 7) ஜோகோவிச், தியம் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எதிர்கொள்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?