Advertisement


சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

ஜூன் 06, 2019 17:18
 Comments  
 


French Open Tennis, Simona Halep, Amanda Anisimova, Madison Keys, Ashleigh Barty
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய ருமேனியாவின் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா மோதினர். முதல் செட்டை 2–6 என இழந்த ஹாலெப், 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார்.

ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஹாலெப் 2–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

கீஸ் ஏமாற்றம்: மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி மோதினர். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?