Advertisement


அரையிறுதியில் நடால்–பெடரர் மோதல்

ஜூன் 04, 2019 22:07
 Comments  
 


nadal, federer, tennis, french open
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரர் மோதவுள்ளனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–2’ வீரரான ஸ்பெயினின் நடால், தரவரிசையில் 7வது இடத்திலுள்ள ஜப்பானின் நிஷிகோரியை எதிர் கொண்டார். முதலிரண்டு செட்டை 6–1, 6–1 நடால் எளிதாக வென்றார். தொடர்ந்து அசத்திய இவர் மூன்றாவது செட்டையும் 6–3 என வசப்படுத்தினார். முடிவில், நடால் 6–1, 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெடரர், சக வீரரான வாவ்ரின்காவை சந்தித்தார். இதில் போராடிய பெடரர் 7–6, 4–6, 7–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் நடால், பெடரர் மோதவுள்ளனர். 

ஜோஹன்னா அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–7’ வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், தரவரிசையில் 26வது இடத்திலுள்ள பிரிட்டனின் ஜோஹன்னாவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–1 என எளிதாக கைப்பற்றிய ஜோஹன்னா, அடுத்த செட்டையும் 6–4 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஜோஹன்னா 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இத்தொடரில் 36 ஆண்டிற்குப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். கடைசியாக, 1983ல் பிரிட்டனின் ஜோ டுரியா அரையிறுதிக்குள் நுழைந்திருந்தார்.

அனிசிமோவா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, ஸ்பெயினின் போல்சோவாவை எதிர் கொண்டார். அபாரமாக செயல்பட்ட அனிசிமோவா 6–3, 6–0 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?