Advertisement


ஸ்ரீகர் பரத் சதம்

மே 31, 2019 21:42
 Comments [1]  
 


india a, test, sri lanka a, Srikar Bharat
 

ஹூப்ளி: இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டில் ஸ்ரீகர் பரத் சதம் கடந்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை ‘ஏ’ அணி இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய ‘ஏ’ அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அன்மோல் அரை சதம்

துவக்கம் முதலே இலங்கை பவுலர்கள் நெருக்கடி தந்தனர். லகிரு குமாரா ‘வேகத்தில்’ கேப்டன் பன்சால், அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட்டாகினர். சித்தேஷ் 32 ரன்கள் எடுத்தார். சான்டகன் ‘சுழலில்’ ஷிவம் டுபே (15), ஜெயந்த் யாதவ் (1) சிக்கினர். பொறுப்புடன் விளையாடிய அன்மோல் பிரீத் (65) அரை சதம் கடந்தார். ஸ்ரீகர் பரத் (117) சதம் அடித்தார். இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு, சான்டகன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை ‘ஏ’ அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தொல்லை கொடுத்தனர். சந்தீப் வாரியர் ‘வேகத்தில்’ நிஷாங்கா (0), பானுகா (18) சிக்கினர். ஷிவம் டுபே பந்துவீச்சில் சமரவிக்ரமா (8), கேப்டன் பிரியாஞ்சன் (19) அவுட்டாகினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை ‘ஏ’ அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெல்லா (27), பிரியமால் பெரேரா (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர், ஷிவம் டுபே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Mandakolathur Subramanian one week ago | Report abuse
ஸ்ரீகர் பரத்துக்கு அன்பான வாழ்த்துக்கள். இது நிச்சயம் ஒரு சாதனை தான் தக்க சமயத்தில். தேர்வுக்குழுவுக்கும் பாராட்டுக்கள். மணியன்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?