Advertisement


கபில் கலக்கல் ‘கேட்ச்’

மே 15, 2019 22:07
 Comments  
 


ICC World Cup 1983, Cricket, Kapil Dev, India
 

உலக கோப்பை தொடரில் கபில் தேவ் ‘கேட்ச்சை’ என்றும் மறக்க முடியாது. கடந்த 1983ல் நடந்த தொடரில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பைனலில் 54.4 ஓவரில், 183 ரன்கள் மட்டும் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கிரினிட்ஜ் (1), ஹெய்ன்ஸ் (13) ஏமாற்றினர். பின், பவுண்டரி மழை பொழிந்த, ரிச்சர்ட்ஸ், மதன் லால் வீசிய பந்தை துாக்கி அடித்தார். இதை சுமார் 60 அடி துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று கபில் தேவ் பிடித்தார். இந்த ‘கேட்ச்’ திருப்புமுனையாக அமைய, வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று சாதித்தது.

இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ‘‘கபில்தேவ் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை. பின்னோக்கி ஓடிச் சென்ற இவர், எல்லைக்கோட்டுக்கு முன்பாக பந்தை பிடித்த போது, எனது கனவு தகர்ந்தது,’’ என்றார்.

 

தெரியுமா

உலக கோப்பை அரங்கில் முதல் சதத்தை இங்கிலாந்தின் டெனிஸ் அமிஸ் (137 ரன், எதிர்: இந்தியா, 1975) அடித்தார். ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (110 ரன், எதிர்: நியூசிலாந்து, 1996), 50வது சதத்தை பதிவு செய்தார். 11 ஆண்டுகளுக்கு பின், 100வது சதத்தை ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் (103 ரன், எதிர்: நியூசிலாந்து, 2007) அடித்தார். கடந்த 2015ல் ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர் (121 ரன், எதிர்: அயர்லாந்து) 150வது சதத்தை பதிவு செய்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?