Advertisement


இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்

மே 15, 2019 21:31
 Comments [1]  
 


IGOR STIMAC AS NEW MEN SENIOR india NATIONAL football TEAM COACH
 

புதுடில்லி: இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷியாவின் இகோர் ஸ்டிமாச் நியமிக்கப்பட்டார்.

இந்திய கால்பந்து அணியின் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பதவி விலகியதால், புதிய பயிற்சியாளர் தேர்வு நடந்தது. தற்போது குரோஷிய முன்னாள் வீரர் இகோர் ஸ்டிமாச் முறைப்படி நியமிக்கப்பட்டார். 1998 ‘பிபா’ உலக கோப்பை தொடரில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றவர். 2012–13ல் குரோஷிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். 2014ல் உலக கோப்பை தொடருக்கு குரோஷிய அணியை தகுதி பெறச் செய்தார்.

கடைசியாக கத்தாரின் அல் சஹானியா கிளப் அணி பயிற்சியாளராக இருந்தார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார். ஆசிய அளவில் இந்திய அணியை ‘டாப்–8’ இடத்துக்குள் கொண்டு வருவது. ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை தொடருக்கு ரெகுலராக தகுதி பெறச் செய்வது, இகோரின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.

வரும் ஜூன் 5ல் தாய்லாந்தில் நடக்கவுள்ள கிங்ஸ் கோப்பை தொடரில் இருந்து, இந்திய அணிக்கு இகோர் பயிற்சியாளராக களமிறங்க உள்ளார்.

அவர் கூறுகையில்,‘‘ என் மீது நம்பிக்கை வைத்து, பயிற்சியாளராக தேர்வு செய்த இந்திய கால்பந்தின் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவுடன் இந்திய அணியை சிறப்பாக செயல்படச் செய்வேன்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pradeesh Parthasarathy 2 weeks ago | Report abuse
இதை போன்று அண்டர் 21 , அண்டர் 19 , அண்டர் 17 , அண்டர் 15 , அண்டர் 13 , என்று எல்லாவற்றிற்கும் மிக சிறந்த பயிற்சியாளரை நியமியுங்கள் ... அப்பொழுது தான் அதன் பலனை பத்து வருடங்களுக்கு பின்னர் நாம் அடைய முடியும் .. சீனியர் அணிக்கு மட்டுமே மிக சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் அதன் பலனை உடனே அனுபவிக்க முடியாது .. இந்தியா கால்பந்தாட்ட அணியின் திட்டமிடல் மிக தவறு ...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?